» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முககவசம் இன்றி பொது வெளியில் நடமாடிய 41 பேருக்கு அபராதம் : ரூபாய் 4100 வசூல்!

புதன் 12, ஆகஸ்ட் 2020 12:49:38 PM (IST)

முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 41 பேருக்கு அபராதமாக ரூபாய் 4100 வசூலிக்கப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், களபணியாளர்கள் மூலமாகவும், சோதனைச் சாவடிகள் மூலமாகவும் 93140 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவிட் கவனிப்பு மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1344 பேர் சிகிச்சையில் உள்ளனர், கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 5278 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் கோவிட் சுகாதார மையத்திலிருந்து 38 நபர்கள் மற்றும் கோவிட் கவனிப்பு மையத்திலிருந்து 54 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 11864 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 4966 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் வாரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6343 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 41 பேருக்கு அபராதமாக ரூபாய் 4100 வசூலிக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory