» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிரசவத்திற்கு சென்ற இளம்பெண் பலி : தனியார் மருத்துவமனை ‍முற்றுகை ‍ ‍‍- கண்ணாடி உடைப்பு !

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2020 7:28:56 PM (IST)

கொட்டாரம் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் இறந்த சம்பவத்தையடுத்து ஆவேசமடைந்த மக்கள் மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

கொட்டாரம் காலேஜ் ரோடு சேர்ந்தவர் சுரேஷ்குமார் (29) சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பவித்ரா (26)  நிறைமாத கர்ப்பிணியான இவர் கொட்டாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவ வலி எடுத்த பவித்ராவுக்கு பெண்குழந்தை பிறந்தது. ஆனால் சில நிமிடங்களிலேயே பவித்ராவுக்கு அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளது. 

டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனில்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியதையடுத்து அங்கிருந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து குமரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜாண்பிரிட்டோ ஆஸ்பத்திரிக்கு வந்து பிரசவம் பார்த்த டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆய்வு நடத்தினார். மருத்துவமனையில் விசாரணை நடத்திவிட்டு வெளியே வந்த இணை இயக்குனரின் காரை விடாமல் முற்றுகையிட்டு மருத்துவமனையை மூடவேண்டும் என்று ஆவேசமாக கூறினர். அப்போது கூட்டத்தில் நின்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மருத்துவமனை கண்ணாடி உடைந்து சிதறியது. 

இதையடுத்து கன்னியாகுமரி சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு பொதுமக்களை சமாதானப்படுத்தி வெளியே அனுப்பினார். ரோட்டிற்கு வந்த இளைஞர்கள் மருத்துவமனையின் வாசலில் அமர்ந்து மறியல் செய்ததோடு அங்கிருந்த விளம்பர போர்டை உடைத்தனர். அப்போது அங்கு வந்த கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் மறியல் செய்த பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைந்து போது கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory