» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வடசேரி பஸ் ஸ்டாண்டில் நாளை முதல் தற்காலிக சந்தை இயங்கும் : வியாபாரிகள் வரவேற்பு!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2020 6:39:40 PM (IST)

வடசேரி பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வந்த தற்காலிக சந்தை மறு அறிவிப்பு வரும் வரை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வடசேரி பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வந்த தற்காலிக சந்தையில் உள்ள வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வாயில்கள் அனைத்தும் அடைக்கப் பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை வடசேரி பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை இயங்காது என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.  சந்தை மூடப்பட்டு ஒரு மாதம் கடந்து விட்டதால், மீண்டும் தற்காலிக சந்தையை திறக்கவேண்டும். இல்லையென்றால், வடசேரி காய்கறி சந்தையை திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக ஆணையர் ஆஷா அஜித், ஆர்.டி.ஓ.மயில், மாநகர நகர்நல அலுவலர் கிங்சால் உள்ளிட்டோர் வியாபாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்படி போதிய இடைவெளிகளுடன் தற்காலிக சந்தையில் கடைகள் அமைக்கப்பட வேண்டும். ஒரே ஒரு நுழைவு வாயில் மூலமே வியாபாரிகள், பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர் தான் பொதுமக்கள் உள்ளே வரவேண்டும். முககவசம் கண்டிப்பாக அணித்திருக்க வேண்டும். வாகனங்கள் எதுவும் உள்ளே வரக் கூடாது. அதிகாலை வேளையில் லோடுகள் ஏற்றி, இறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

கடைகளின் வரிசை எண்ணின் அடிப்படையில் கடை ஒதுக்கப்படும் என்றும் கூறினர். இது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தைக்கான கடை கட்டும் பணி நடக்கிறது. சவுக்குகம்புகள் மூலம் கூடாரம் அமைக்கும் பணிகள் நடந்தன. இன்று காலையிலும் கூடாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்காக ஒவ்வொரு வியாபாரியும் ரூ.10,000 கொடுக்க வேண்டும். இன்று காலை வரை 90 கடைகளுக்கான வியாபாரிகள், கூடாரம் அமைப்பதற்கான ஏற்பாட்டில் இருந்தனர். நாளை முதல்கடைகள் செயல்பட தொடங்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், இன்று காலை வடசேரி பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். சிபிஎச் மருத்துவமனை எதிரில் கால்வாய்கள் அடைப்புகள் இருந்தன. அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் வடசேரி பஸ் நிலைய தற்காலிக சந்தை அமைக்கும் பணியையும் பார்வையிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory