» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முதியவர் விஷம் குடித்து தற்கொலை! போலீசார் விசாரணை!!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2020 6:04:52 PM (IST)

மருங்கூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் விஷ மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரை சேர்ந்தவர் மிக்கேல் தேவசகாயம் (58). இவருக்கு சர்க்கரை நோயினால் இடது கால் முழங்காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு விஷ மருந்தை சாப்பிட்டு விட்டு வாயில் நுரையுடன் மயக்க நிலையில் ராஜாவூர் உடையன்பாறைகுளம் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உறவினர்கள் அங்கு சென்று அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory