» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுவர் இடிந்து வாலிபர் பலி : ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் உத்தரவு!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2020 11:57:10 AM (IST)

கடல் சீற்றத்தால் சுவர் இடிந்து பலியான வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை : கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை கிராமத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக கடல் நீர் ஊருக்குள் புகுந்ததில், மரியதாஸ் என்பவருடைய வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து, அவருடைய மகன் பிரதீப் அஸ்வின் என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன். காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்துயரச் சம்பவத்தில் லிஸ்டன் என்பவரது மகன் செல்வன் லிபின் மற்றும் சிலுவை என்பவரது மகன் செல்வன் விதுல் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். சம்பவத்தில் உயிரிழந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory