» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கரோனா நோயாளிகளுக்கு மூலிகை கோழி பிரியாணி : அதிமுக பிரமுகர் அசத்தல்!

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 1:16:13 PM (IST)அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை ஏற்படுத்தும் மூலிகையினால் தயாரிக்கப்பட்ட முட்டையுடன் கூடிய கோழி பிரியாணி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க மாணவரணி சார்பில், நாகர்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை மற்றும் தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் 650 நோயாளிகளுக்கு , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திடும் வகையிலும், அவர்களுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலும், நோய் எதிர்ப்பு சக்தியினை ஏற்படுத்தும் மூலிகையினால் தயாரிக்கப்பட்ட முட்டையுடன் கூடிய கோழி பிரியாணியினை இன்று (09.08.2020) வழங்கினார்.

மாவட்ட ஆவின் தலைவர் அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியப் பெருந்தலைவர் கிருஷ்ணகுமார், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் அழகேசன், மாவட்ட மாணவரணி செயலாளர் மனோகரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர்  ஜெசீம், பேரூர் கழக செயலாளர் வீரபுத்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory