» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேங்காய்பட்டணம் துறைமுக முகத்துவாரத்தை சீரமைக்க ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீடு!

சனி 8, ஆகஸ்ட் 2020 7:25:26 PM (IST)தமிழக முதலமைச்சர் தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரத்தை சீரமைக்க ரூ.1.60கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என தமிழ்நாடு அரசின் டெல்லி  சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு : தமிழ்நாடு முதலமைச்சர், தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் முகத் துவாரத்தை சீரமைக்க ரூ.1.60 கோடிநிதி ஒதுக்கீடு செய்துள்ளதையடுத்து, விரைவில் பணிகள் துவங்கப்படவுள்ளது என  தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், சின்னத்துறையில் நடைபெற்ற, மீனவ மக்களின் கோரிக்கை போராட்டத்தின் போது தெரிவித்துள்ளார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் முகத் துவாரத்தை சீரமைத்து, மணல்திட்டுகளை அகற்றிட வேண்டுமெனவும், அப்பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும், அப்பகுதியில் இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தமிழ அரசின் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்தூர் மண்டல மீனவர்களின் அமைப்பு, சின்னத்துறை மீன்பிடித் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில்,பங்குத்தந்தை டோனிடீபால் தலைமையில், இன்று (08.08.2020) மீனவர்கள் உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்களை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் நேரில் சந்தித்து, அவர்களிடம் பேசியதாவது:  உயிரழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் மேம்பாட்டிற்காக, என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக, நாங்கள் அனைவரும் மீன்வளத்துறை துணை இயக்குநர் அவர்களை இப்பகுதிக்கு அழைத்து வந்துள்ளோம். 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே, நான் தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்தித்து, தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் உள்ள முகத்துவாரத்தை தூர் வாரவேண்டும் என்ற கோரிக்கையினை, இப்பகுதியில் வசிக்கும் மீனவர்களின் நலன் கருதி எடுத்துரைத்தேன். மீனவர்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர், இக்கோரிக்கையினை ஏற்று, தேங்காய்பட்டணம் முகத்துவாரம் சீரமைக்க உடனடியாக ரூ.1.60கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். முகத்துவாரத்தில் மணல் மேடுகள் அகற்றும் பணி, விரைவில் துவங்கப்படும்.

இறந்த மீனவர்களின் விவரங்கள் அனைத்தையும் சேகரித்து, அதனை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று, இதன்மூலம் பெறப்படும் நிவாரணத் தொகையும் விரைவில் பெற்று, இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்க,உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும்.

மேலும், பாரத பிரமரின், மத்தியஸ்த சம்பத் யோஜனா திட்டத்தின் கீழ், பிரதான மற்றும் துணை அலை தடுப்பு சுவர்கள் நீட்டிப்பதற்காக ரூ.140 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இத்திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். 

இதனைத் தொடர்ந்து, மீனவமக்கள் நடத்திய போராட்டத்தை கைவிட்டனர். மேலும், மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முகத்துவாரத்தில் மணல்மேடுகள் அகற்றும் பணிகள், மேற்குறிப்பிட்ட தேதியில் துவங்கப்படும் என தெரிவித்தார்கள். இந்நிகழ்வில், அரசுரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ஜாண்தங்கம், தெற்காசிய மீனவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் சர்ச்சில், மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory