» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முதியவரை தாக்கி கொலை மிரட்டல்! போலீஸ் விசாரணை!!

சனி 8, ஆகஸ்ட் 2020 5:32:34 PM (IST)

மார்த்தாண்டம் அருகே முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மார்த்தாண்டம் அருகே மேல்புறம் குந்நம்விளாகம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(60). பாகோடு வாழவிளைகுழி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், இவரது மகன் கனகராஜூடன் பழகி வந்துள்ளார். இதை செல்வராஜ் கண்டித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கனகராஜ் குந்தம் விளாகம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய செல்வராஜ் தகாத வார்த்தைகள் பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். படுகாயம் அடைந்த கனகராஜ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory