» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பைக் நிலை தடுமாறி விபத்து : பெயிண்டர் பலி!

சனி 8, ஆகஸ்ட் 2020 5:27:40 PM (IST)

சாமிதோப்பு அருகே பைக் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெயிண்டர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்.

சாமிதோப்பு அருகிலுள்ள கோட்டையடிபுதூரை சேர்ந்தவர் சாதிக் அலி (33). பெயிண்டர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வரும் போது கரும்பாட்டூர் பகுதியில் பைக் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் பாய்ந்தது. இதில் சாதிக்அலி பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலளிக்காமல் சாதிக் அலி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் பலியான சாதிக் அலிக்கு மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குறித்து தென்தாமரை குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory