» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாெபைல் ஆப் மூலம் இளம்பெண் மீட்பு : குமரி போலீசார் அதிரடி

சனி 8, ஆகஸ்ட் 2020 11:47:56 AM (IST)

நித்திரவிளை பகுதியில் காணாமல் போன பெண்ணை CCTNS செயலி (App) மூலம் கண்டுபிடித்த போலீசார் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு பெண்  நிற்பதாக தகவல் வந்தது. உடனே நித்திரவிளை காவல் நிலைய ரோந்து அலுவல் செய்யும் தலைமைக் காவலர் வாசுதேவன் மற்றும் ஊர் காவல் படையை சேர்ந்த டிட்டோ ஆகியோர் சென்று காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது முன்னுக்கு பின் தவறான தகவல் அந்த பெண் கூறியுள்ளார். 

உடனே CCTNS ல் பணி புரியும் பெண் தலைமை காவலர் பிரபா, CCTNS செயலி (App) மூலம் அந்த பெண் வேறு மாவட்டத்தை சேர்த்தவர் என்பதும், அந்த பெண் காணாமல் போனதாக வழக்கு இருப்பதை கண்டு பிடித்தார். பின்பு சம்மந்தப்பட்ட அந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து பெண்ணின் பெற்றோரை வரவழைத்து  அந்த பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மிக துரிதமாக செயல்பட்ட ரோந்து காவலர்களையும், கண்டுபிடிக்க உதவிய தலைமை காவலர்  பிரபாவையும் அதிகாரிகள் பாராட்டினர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory