» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு இலவச லேப்டாப் பெயரில் போலி லிங்க் : இணையதளவாசிகளுக்கு போலீஸ் அலார்ட்!

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 12:41:13 PM (IST)

அரசு இலவச லேப்டாப் பெயரில் இணையதளத்தில் போலி லிங்க் உலவிவருவது குறித்து உஷாராக இருக்குமாறு குமரி போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட போலீசாரின் பேஸ்புக் பக்கத்தில் வெளியடப்பட்டுள்ள உஷார் அறிவிப்பு : தற்காலத்தில் இணையதளம் இன்றி நாள்பொழுதும் கிடையாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் இணையதள திருடர்களும் (ஹேக்கர்கள்) நாளுக்கு நாள் புதுப்புது டெக்னிக்களை கண்டுபிடித்து நம் இணையதள வங்கிக் கணக்குகள் மற்றும் இரகசிய தரவுகளை திருடிச் செல்வது அதிகரித்து வருகிறது. நாம் பொழுது போக்கிற்காகவும், பல்வேறு தகவல்களை அறிவதற்காகவும் அடிக்கடி இணையதள பக்கங்களை பார்ப்போம். இதில் அடிக்கடி சில லிங்குகள் வந்து தொல்லை தரும். இதில் சில லிங்குகளை கிளிக் செய்தால் தங்களுக்கு பரிசு விழுந்ததாக தெரிவிப்பார்கள். நாமும் அதை நம்பி கிளிக் செய்தால், பின்னர் நமது செல்போன் தகவல்கள், வங்கி பணம் ஆகியவை அம்போவாகிவிடும்.

தற்போது அரசின் இலவச லேப்டாப்களை FREE LAPTOP SCHEME 2020 - Register Now என்ற பெயரில் http://laptops.offers247.online என்ற லிங்கை கிளிக் செய்தால் இலவசமாக பெறலாம் என கூறப்பட்டுள்ளது. உங்கள் மொபைலில் மேற்கண்ட லிங்கை போன்று வரும் லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள். நீங்கள் தவறுதலாக கிளிக் செய்யும் பட்சத்தில் உங்கள் மொபைலில் உள்ள முக்கியமான தகவல்கள், கணக்குகள் போன்றவை போலிகளால் (ஹேக்கர்கள்) திருடப்படலாம். எனவே இணையதள பயன்பாட்டாளர்கள் விழிப்புடன் இருங்குமாறு கன்னியாகுமரி மாவட்ட போலீசாரின் பேஸ்புக் பக்கத்தில் உஷார் அறிவிப்பு வெளியடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

NirmalaAug 11, 2020 - 05:54:23 PM | Posted IP 157.4*****

For studies

NirmalaAug 11, 2020 - 05:54:22 PM | Posted IP 157.4*****

For studies

JohnAug 7, 2020 - 04:22:07 PM | Posted IP 157.5*****

Yes

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory