» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கரோனா நோயாளிகளுக்கு மூலிகை கலந்த மீன்குழம்பு!

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 10:46:20 AM (IST)

நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோருக்கு நோய் எதிா்ப்பு சக்திக்காக மூலிகை கலந்த உயர்ரக மீன் குழம்பு உணவு வழங்கப்பட்டது.


நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தக்கலை அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றில் 650 க்கும் மேற்பட்டோா் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்திடும் வகையில், மருந்துகள், உணவுகள் வழங்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, மல்லி, சீரகம்,வெந்தயம் உள்ளிட்ட பொருள்களோடு, நோய் எதிா்ப்பு சக்திக்காக மூலிகைகளும் சோ்க்கப்பட்டு உயர்ரக மீன் குழம்பு தயாரிக்கப்பட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வழங்கினாா்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா்கள், குமாரபாண்டியன், சங்கரநாராயணன், அறங்காவலா் குழு உறுப்பினா் சந்துரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் செந்தில்குமாா் மேற்பாா்வையில், உணவக உரிமையாளா் சங்கத் தலைவா் ஷாஜகான், நிா்வாகிகள் மற்றும் சமையல் கலைஞா்கள் ஆகியோா் இணைந்து மீன் குழம்பை தயாரித்தனா்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory