» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி கொலை! மரப்பட்டறை அதிபர் வெறிச்செயல்!!

வியாழன் 6, ஆகஸ்ட் 2020 5:30:42 PM (IST)

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் கள்ளக்காதலனுடன் இருந்த மனைவியை மரப்பட்டறை அதிபர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில் அருகே உள்ள மேலஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (49). இவரது மனைவி நீலாவதி (42). இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகன் உள்ளார். ராமதாஸ் ஆசாரியள்ளம் வசந்தம்நகர் பகுதியில் மரப்பட்டறை தடத்தி வருகிறார். மரப்பட்டதை அருகில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நீலாவதிக்கும் அந்த பகுதியை சேர்த்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் அவர்களூக்கு இடையே கள்ளக் காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்வாசமாக இருந்து வந்தனர். இதை அறிந்து ராமதாஸ் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து கண்டித்தும் தீலாவதி கள்ளத் தொடர்பை விடவில்லை.இதனால் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ராமதாசும், அவரது மகனும் மேலஆசாரிபள்ளத்தில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டனர். 

ராமதாஸ் தினமும் காலையில் அங்கிருந்து மரப்பட்டறைக்கு வந்து வேலைகளை கவனித்து விட்டு மீண்டும் மாலையில் மேல ஆசாரிபள்ளம் சென்று விடுவார். இங்கு அவர்கள் வசித்த வீட்டில் நீலாவதி மட்டும் தனியாக இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ராமதாஸ் மரப்பட்டறைக்கு வந்துள்ளார். அப்போது நீலாவதி வீட்டில் லைட் எரித்துக் கொண்டிருந்தது. மேலும் அங்கிருந்து சத்தமும் கேட்டுள்ளது. 

இதனால் ராமதாஸ் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தீவாவதியும், அவரது கள்ளக்காதலனும் வீட்டில் இருந்தனர். அவர்களை பார்த்து ஆத்திரமடைந்தவர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து நீலாவதியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. அவரது கழுத்து, வயிறு மற்றும் உடலில் பல இடங்கனில் கத்தி குத்து விழுந்துன்ளது. வலி தாங்காமல் அலறி துடித்த அவர் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

பின்னர் ராமதாஸ் ரத்த கதை படித்த கத்தியுடன் ஆசாரிபள்ளம் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அப்போது அவர், கள்ளக்காதலனுடன் இருந்த தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி கணே சன், ஆசாரி பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலீசார் நீலாவதியின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குபதிவு செய்து ராமதாசை கைது செய்தனர். கள்ளக்காதலனுடன் இருந்த பெண்ணை அவரது கணவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory