» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இன்று மாலை முதல் சுய ஊரடங்கு! : குமரி பங்கு பேரவை அறிவிப்பு

வியாழன் 6, ஆகஸ்ட் 2020 1:01:47 PM (IST)

கன்னியாகுமரியில் அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று மாலை முதல் மறு அறிவிப்பு வரும் வரை சுய ஊரடங்கை கடைபிடிக்க பங்கு பேரவை அறிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் வகையில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல ஊர்கமிட்டி தலைவர் நாஞ்சில் மைக்கேல் சுய ஊரடங்கை கடைபிடிக்க மக்களை அறிவுறுத்தி வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இதனால் இன்று (6ம் தேதி) மாலை 5 மணிமுதல் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. 

பங்குமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு தேவையான மருந்து, காய்கறி, மளிகை பொருட்களை வாங்கி வைத்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க யாரும் செல்லக்கூடாது. ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட 6ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது. மக்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory