» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டயர் வெடித்ததால் விபத்து : பாதாள சாக்கடை பள்ளத்தில் சரிந்து விழுந்த லாரி!

வியாழன் 6, ஆகஸ்ட் 2020 12:40:57 PM (IST)

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் கல்குவாரிக்கு பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி டயர் வெடித்ததில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சரிந்து விழுந்தது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள்  மூடப்படாததால் தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணன்கோவில் சந்திப்பு பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் முழுமையாக மூடப்படாமல் இருந்தது. நேற்று காலை ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து குமரி மாவட்ட கல்குவாரிக்கு பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.  வாகன ஓட்டுனர் லாரியை சாலை ஓரத்தில் ஒதுக்கியபோது பாதாளசாக்கடை பணிகளுக்காக தோண்டிய பள்ளத்தில் வாகனத்தின் சக்கரம் சிக்கியது. இதைத்தொடர்ந்து டாரஸ் லாரி  சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.  அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போக்குவரத்து போலீசார் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory