» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சனி 1, ஆகஸ்ட் 2020 1:01:08 PM (IST)நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அழகான மாநகரம் திட்டத்தின் படி நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நடைபாதையோடு கூடிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன .அதன்படி மாநகராட்சி சொந்தமான சரலூர் சந்தை மற்றும் அவிட்டம் திருநாள் மகாராஜா மைதானம் ஆகிய பகுதிகளில் இருந்த சுற்றுச் சுவர்கள்  அகற்றப்பட்டு உட்புறமாக கம்பிகள் மூலமாக சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டன. 

மேலும் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் நடந்து செல்வதற்கு வசதியாக நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.தற்போது அப்பகுதியில் சாலைகள் விசாலமானதாகவும் இரவு நேரங்களில் அழகிய மின்விளக்குகளாலும் புதிய பொலிவுடன்  காட்சியளிக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory