» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருடர்களை பிடிக்க சென்ற விஏஓ., மீது தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி

சனி 1, ஆகஸ்ட் 2020 11:43:57 AM (IST)

தென்னந் தோப்பில் தேங்காய் திருடிக் கொண்டிருந்தவர்களை பிடிக்க சென்ற விஏஓ.,வை சரமாரியாக தாக்கி தப்பியோடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே குருக்கள்மடத்தை சேர்ந்தவர் செந்தில்கார்திகேயன். இவர் அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் வில்லேஜ் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் நேற்றிரவு அலுவலகத்தில் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அவருடைய தென்னந்தோப்பில் அத்துமீறி நுழைந்து தேங்காய் பறித்துக்கொண்டு இருந்த கும்பலை பார்த்தார். இதையடுத்து அவர்களை பிடிக்க தோப்பிற்குள் சென்ற போது, எதிர்பாராத விதமாக அதே ஊரில் உள்ள தேங்காய் திருடர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்று விட்டனர்.

படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர். சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரியை தாக்கி விட்டு தேங்காய் திருடர்கள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory