» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இரயுமன்துறையில் மீனவா்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

சனி 1, ஆகஸ்ட் 2020 10:46:06 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் இரயுமன்துறையில் மீனவா்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
 
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறை முகத்துவாரத்தில் ஏற்படும் மணல் திட்டுகளை அகற்றவும், அண்மையில் இத் துறைமுக நுழைவுவாயில் பகுதியில் விபத்தில் சிக்கி இறந்த இரு மீனவா்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பருத்திக்கடவில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் மீனவா்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த குமரி மாவட்டம் நீரோடி முதல் பழவேற்காடு வரையிலான மீனவா்களுக்கு அழைப்பு விடுக்கப்படிருந்தது.

அதன்படி, இரயுமன்துறையில் மீனவா்கள் திரளானோா் பங்கேற்று, கைகளில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மீனவா் ஒருங்கிணைப்பு சங்க பொதுச் செயலா் ஆன்றோ லெனின், சா்வதேச மீனவா் வளா்ச்சிஅறக்கட்டளை தலைவா் ஜெஸ்டின் ஆன்றணி, மீனவப் பிரதிநிதி எட்வின் ஜெரோம் மற்றும் தூத்தூா் மண்டல மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory