» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வில்லுக்குறி அருகே பள்ளி ஆசிரியை தற்கொலை : போலீசார் விசாரணை

வெள்ளி 31, ஜூலை 2020 6:02:51 PM (IST)

வில்லுக்குறி அருகே பள்ளிக்கூட ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண்பால் (37). இவருடைய மனைவி வனஜாரோஸ் (33). ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. குழந்தை இல்லாததால், ஜாண்பாலின் தம்பி பிள்ளைகளை அவர்கள் வளர்த்து வந்துள்ளனர். வனஜாரோஸ் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று ஜாண்பால் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வனஜாரோஸ் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். உடனே ஜாண்பால், எதற்காக அது குறித்து கேட்டுள்ளார். அதற்கு, வீட்டில் வைத்திருந்த தென்னை மரத்துக்கு வைக்கப்படும் விஷ மாத்திரையை தின்று விட்டதாக தெரிவித்தாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாண்பால், மனைவி வனஜாரோசை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு டாக்டர் இல்லாததால் சிகிச்சை அளிக்கவில்லை. பின்னர் மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வனஜாரோஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆசிரியையின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory