» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி மாநகராட்சியை வியாபாரிகள் முற்றுகை

வெள்ளி 31, ஜூலை 2020 1:49:06 PM (IST)தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் வியாபாரிகள், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், வி.இ ரோட்டில் வ.உ.சி. மார்க்கெட் இயங்கி வருகிறது. அந்த கடைகளை நம்பி 8 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இதுவரை இந்த மார்க்கெட்டை வியாபாரிகள் சங்கம் நிர்வகித்து வந்தது. வாடகை பணத்தை வியாபாரிகள் சங்கம் மாநகராட்சிக்கு செலுத்தி வந்தது. தினம் ரூ. 40 ஆக இருந்த வாடகையை தற்போது வரும் 1 ம் தேதி முதல் ரூ. 400 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிப்பு செய்து அதற்கான அறிவிப்பு பலகையை மாநகராட்சி அலுவலர்கள் வைக்க வந்துள்ளனர். 

இதை கண்டித்து 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று மதியம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.வியாபாரிகள் சங்க பொருளாளர் அன்புராஜ், முன்னாள் எம்எல்ஏ., சி.த. செல்லப்பாண்டியன் ஆகியோர் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் மாநகராட்சி முன்பு டிஎஸ்பி கணேஷ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஏற்கனவே வாடகை பணம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளது. இது வியாபாரிகளுக்கு சாதகமாக உள்ள நிலையில் மாநகராட்சி வேண்டுமென்றே கரோனா காலத்தில் தங்களை வதைப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டினர்.


மக்கள் கருத்து

tamilanAug 1, 2020 - 11:50:33 AM | Posted IP 162.1*****

பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மார்க்கெட்டில் உள்ள பொருட்களின் விலையையும் இந்த மார்க்கெட்டில் உள்ள விலையையும் ஒப்பிட்டு பாருங்கள் வித்தியாசம் தெரியும் .

tamilanAug 1, 2020 - 11:40:12 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி வ .உ .சி . மார்க்கெட்டில் தான் காய்கறி பழங்கள் விலை அதிகமாக உள்ளது . நல்லா சம்பாதிக்கிறீர்கள் வாடகை கொடுப்பதற்கு என்ன கஷடம் .

உண்மJul 31, 2020 - 08:55:27 PM | Posted IP 162.1*****

மாநகராட்சியே .. நல்ல காற்றோட்டம் உள்ள சுத்தமான இடத்தில தேவையில்லாமல் சாக்கடை அமைப்பதை நிறுத்தவும் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory