» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குளச்சல் போரின் வீர வணக்க நிகழ்ச்சி : வெற்றித்தூணில் மரியாதை

வெள்ளி 31, ஜூலை 2020 1:26:10 PM (IST)குளச்சல் போர் வெற்றித்தூணில் வீர வணக்க நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்  ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

நாகர்கோவில் மாவட்டம் குளச்சல் கடற்கரையில் 279 வருடங்களுக்கு முன்பு டச்சுப்படையினருக்கும் திருவாங்கூர் சமஸ்தான படையினருக்கும் 2 மாதங்கள் போர் நடந்தது.  1741 ஆம் ஆண்டு ஜூலை 31ம் தேதி திருவாங்கூர் படை சச்சுப்படையை வென்றது.இந்த போரின் வெற்றி நினைவாக திருவாங்கூர் சமஸ்தானம் குளச்சல் கடற்கரையில் வெற்றித்தூண் ஒன்றை நிறுவியது. கடந்த சில வருடங்களாக மெட்ராஸ் ரெஜிமெண்ட் சார்பில் இந்த வெற்றித்தூணில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்து வருவதால் இந்த வருடம் குளச்சல் போர் வெற்றித்தூணில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறாது என ரெஜிமெண்ட் வட்டாரம் தெரிவித்திருந்தது.இந்நிலையில்  இந்த நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டு மெட்ராஸ்  ரெஜிமெண்ட் 9ஆவது பட்டாலியன் கமெண்டிங் ஆபிசர் தாஸ் உள்பட  10 வீரர்கள்  வெள்ளிக்கிழமை  காலை குளச்சல் போர் வெற்றித்தூண் வளாகம் வந்து எளிமையான முறையில் தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.இதில் குளச்சல் எம்.எல்.ஏ.பிரின்ஸ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெயந்தி, சுகாதார அலுவலர் நட்ராயன், பங்குத்தந்தை மரிய செல்வன், உள்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory