» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் : மாநகராட்சி ஆணையர் ஆய்வு

வெள்ளி 31, ஜூலை 2020 11:35:59 AM (IST)



மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

நாகர்கோவில் வடசேரி டிஸ்ட்லரி ரோடில்  மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன .இதனை மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜீத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.மேலும் மழைநீர் வடிகால் மேல் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்து கடையை வைத்து இருந்தனர் 

அதனை அப்புறப்படுத்தி வடிகால் பணியை முழுமையாக செயல்படுத்த உத்தரவிட்டார். அதுபோல் வடசேரி சந்தை , ஆம்னி பஸ்ஸ்டாண்ட்  டிஸ்டலரி அப்பொரோச் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்காக நடைபாதைகள் அமைப்பது குறித்தும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory