» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கடனை திருப்பி கேட்டதால் தாக்கி கொலை மிரட்டல் : 2 பேர் மீது வழக்குப்பதிவு

வெள்ளி 31, ஜூலை 2020 11:10:16 AM (IST)

மார்த்தாண்டம் அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பாகோட்டை சேர்ந்தவர் சந்திரன். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஷாஜின் என்பவர் 1000 ரூபாய் கடன் வாங்கி இருந்தார். ஷாஜின் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லையாம். இதனால் சந்திரன் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாஜின் தனது சகோதரர் சைஜூவுடன் சேர்ந்து சந்திரனை கெட்டவார்த்தை பேசி, இரும்பு கம்பியால் தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரனின் புகாரில் மார்த்தாண்டம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார்  குற்றவாளிகள் சைஜூ மற்றும் ஷாஜின் மீது வழக்கு பதிவு செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory