» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ராமர் கோவில் கட்டுவதற்கு அயோத்திக்கு நீர், மண் : கன்னியாகுமரியில் இருந்து அனுப்பப்பட்டது

வெள்ளி 31, ஜூலை 2020 10:57:23 AM (IST)

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை வருகிற 5ம் தேதி நடக்கிறது. இதற்காக கன்னியாகுமரியில் இருந்து நீர், மண் ஆகியவை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை வருகிற 5ஆம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.இந்த நிலையில் ராமர் கோயில் பூமி பூஜையின்போது பயன்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள புனித தலங்கள் மற்றும் தீர்த்தங்களில் இருந்து புனிதமானதாக கருதப்படும் நீர், மண் ஆகியவற்றை இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சேகரித்து அயோத்திக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் இருந்து நீர், மண் எடுக்கப்பட்டு அயோத்திக்கு நேற்று (30 ம் தேதி) அனுப்பி வைக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம சங்கிலித்துறை கடற்கரையில் இருந்து மண்ணும், நீரும் சேகரிக்கப்பட்டது. முன்னதாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்பணி சிறப்பாக நடைபெற வேண்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் பெறப்பட்டது. அந்த பிரசாதமும் நீர் மற்றும் மண்ணுடன் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory