» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : குமரி ஆட்சியர் வேண்டுகோள்

வியாழன் 30, ஜூலை 2020 8:38:27 PM (IST)

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு வரும் அரசு அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்வடநேரே வெளியிட்ட செய்திகுறிப்பில்,மாவட்டத்தின் சில கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உதாரணமாக வாணியக்குடி கிராமத்தின் சில பகுதிகளில் வசிக்கும் சிலர் கொரோனா நோய்த்தொற்றின் விபரீதத்தை அறியாமல் மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சளி பரிசோதனை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து இந்த நிலை தொடருமானால் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்காத கட்டுப்பாட்டுப்பகுதி அமைந்துள்ள அப்பகுதி முழுவதையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.  மாவட்டத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது.

எனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு வரும் அரசு அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தாங்களாகவே பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 02.08.2020, 09.08.2020, 16.08.2020; 23.08.2020 மற்றும் 30.08.2020 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு அறிவிப்பின்படி முழு ஊரடங்கு எந்தவிதமான தளர்வுகளும் இன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமல் படுத்தப்படும்.அரசு அறிவிப்பின்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து  31.08.2020 முடிய  தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 175 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 17500   வசூலிக்கப்பட்டது.

ன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 8245 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி  மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 4373 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.    ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில்  மொத்தத்தில் இதுவரை  8556  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும்  ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6343 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory