» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தொழிற்கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அழைப்பு!

வியாழன் 30, ஜூலை 2020 5:35:22 PM (IST)

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் (PMEGP) 35% மானியத்துடன் தொழிற்கடன் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற சுயதொழிற் கடனுதவித் திட்டத்தின் கீழ், உற்பத்தி சார்ந்த தொழில் இனங்களுக்கு 25 லட்சம் அதிகபட்ச திட்ட முதலீடு மற்றும் சேவை சார்ந்த தொழில் திட்டங்களுக்கு ரூ.10.00 இலட்சம் அதிகபட்ச திட்ட முதலீட்டிலும் மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. அதிகபட்ச மானியமாக 35% வழங்கப்படும். 

இத்திட்டத்தில் கம்ப்யூட்டர் சென்டர், தையல், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, இருசக்கர வாகனம், நான்கு சக்கரம் பழுதுநீக்கம், பேக்கரி தயாரிப்பு, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்கம் செய்தல், அட்டைபெட்டி, தென்னை சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, பனை சார்ந்த பொருட்கள் தயாரிப்பு மண்பாண்டம் தயாரிப்பு இன்னும்பிற வாய்ப்புள்ள தொழில்களும் துவங்கலாம். 

தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கும் நாளில் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். தற்போது தொழில் முனைவோர் பயிற்சியிலிருந்து செப்டம்பர் 2020வரை அரசால் விலக்களிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்கள் www.kviconline.gov.in/DIC என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

விண்ணப்பத்துடன் 1. ஆதார் அட்டை, 2. கல்வித்தகுதி சான்றிதழ், 3. புகைப்படம் (கடவுச்சீட்டு அளவு), 4. சாதிச்சான்றிதழ் (O.B.C ஆண்களுக்கு மட்டும்),5. திட்டஅறிக்கை, 6. குடும்ப அட்டை நகல், 7. இயந்திரங்களுக்கான விலைப்புள்ளி பட்டியல் (GST No இருக்க வேண்டும்) அசல் ஒன்று நகல் ஒன்று. 8. தொழில் செய்யும் இடம் கிராமப்புறமாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் பெற்ற மக்கள் தொகை சான்று ஆகிய ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவினரால் கிராமப்புறத்தில் துவங்கப்படும் நிறுவனங்களுக்கு திட்ட முதலீட்டில் 25 சதவீதமும் நகர்புறங்களில் துவங்கப்படும் நிறுவனங்களுக்கு திட்ட முதலீட்டில் 15 சதவீதமும் மானியமாக வழங்கப்படும். 

மேலும் ஆதிதிராவிடர்/பழங்குடியினர், இதரபிற்படுதப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரால் கிராமப்புறங்களில் துவங்கப்படும் நிறுவனங்களுக்கு திட்ட முதலீட்டில் 35 சதவீதம் மற்றும் நகர்புறத்தில் துவங்கப்படும் நிறுவனங்களுக்கு திட்ட முதலீட்டில் 25 சதவீதமும் மானியமாக வழங்கப்படும்.(அதிகபட்சம் 8.75 இலட்சம்) இத்திட்டத்தினை தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்கிட விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெற வேண்டும்.

இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் ரோடு, தூத்துக்குடி (0461-2340053, 2340152) என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

p.subbiah s.o.pooliah handicap kayatharJul 30, 2020 - 09:32:01 PM | Posted IP 173.2*****

ஐயா அவர்களுக்கு வணக்கம் மிக்க நன்றி. நாங்கள். இருவரும் ஓ.ஏ.பி. வாங்கி அதில் மிதமுள்ள ருபாய் வைத்து ஏதாவது மதிப்பிற்குரிய அதிகாரிகள் தொழில் தொடங்கும்முன்பு பாவப்பட்ட மாற்றுத்திறனாளிகளை மீண்டும் படுகுழியில் இத்திட்டத்தால் தள்ளி யாரையும் எந்த ஊனமுற்றவர்களை. கனவிலும் நினைக்காதீர்கள் பாவம் எங்கள் உயிரோடு விளையாடாதீர்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory