» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குழித்துறை அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டதால் பரபரப்பு

வியாழன் 30, ஜூலை 2020 10:42:40 AM (IST)

கன்னியாகுமரி குழித்துறையில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் மர்ம நபர்கள் காவி கொடி கட்டியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி குழித்துறை சந்திப்பில் உள்ள அண்ணாசிலை பீடத்தில் மர்மநபர்கள் சிலர் காவிக் கொடி கட்டி சென்றுள்ளனர். பழைய சீரியல் பல்பு மற்றும் சிவப்பு பூக்கள் கொண்ட ஆரம் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு ஏற்கனவே காவித்துண்டு போர்த்திய நிலையில் தற்போது குமரியில் அண்ணாசிலை பீடத்தில் காவிக் கொடி கட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory