» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிறுமிக்கு பாலியல் தொல்லை : முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது

புதன் 29, ஜூலை 2020 5:33:32 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவிலில் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவான அவரை 5 தனிப்படைகள் அமைத்து கன்னியாகுமரி போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பதுங்கியிருப்பதாகத் தகவல் வந்தது. இதனையடுத்து திசையன்விளையில் பதுங்கியிருந்த நாஞ்சில் முருகேசனை கன்னியாகுமரி போலீஸார் கைது செய்தனர். அவர் கன்னியாகுமரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் போக்சோ நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

நாகர்கோவில் கோட்டாறைச் சேர்ந்த 15 வயதான 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாஞ்சில் முருகேசன் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.மாணவியின் தந்தை அளித்த புகாரில் மகளை அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று விட்டதாகக் கூறியிருந்தார். போலீஸார வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மாணவியையும், அவரை அழைத்துச் சென்ற வாலிபரையும் மீட்டனர்.

மாணவியிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் நடத்திய விசாரணையில். தன்னைக் கடந்த 4 ஆண்டுகளாக முக்கிய பிரமுகர்களுடன் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகவும், இதற்கு உறவினர்களே உடந்தையாக இருந்ததாகவும் மாணவி தெரிவித்தார்.

மேலும் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரின் பெயரைக் கூறி, தன்னை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், கடந்த 2017ம் ஆண்டு தனது தாயார் நாஞ்சில் முருகேசனிடம் அழைத்துச் சென்றபோது அவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் மாணவி கூறியுள்ளார்.மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸார் நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


மக்கள் கருத்து

MakkalJul 31, 2020 - 09:09:36 AM | Posted IP 108.1*****

யாரையும் கான்னொம் கருத்து கூற.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory