» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொரோனா பாதித்தோருக்கு உணவகங்கள் மூலம் தரமான உணவு : அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவு

செவ்வாய் 21, ஜூலை 2020 8:09:55 PM (IST)


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள, கொரோனா பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, நாளை (22.07.2020) முதல் தனியார் உணவகங்கள் வாயிலாக, தரமான உணவளிக்க அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோட்டார் அரசுமருத்துவ கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில் ,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ,கொரோனா பாதுகாப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, தனியார் உணவகங்கள் வாயிலாக உணவுகள் வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் கடம்பூர் செ.ராஜூ ,தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில், மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, முன்னிலையில், நடைபெற்றது. இக்கூட்டத்தில், தனியார் உணவக நிர்வாகிகள், .ஆனந்தன் (பிரபுஹோட்டல்), சங்கத்தலைவர் ஷாஜகான்,பொருளாளர் ராஜாமணி,செயலாளர் சுகுமாறன்,ராமசுப்பு (கௌரிசங்கர் ஹோட்டல்),ரமேஷ் (ஆரியபவன் ஹோட்டல்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் ,தனியார் உணவகங்கள் வாயிலாக, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள, கொரோனா பாதுகாப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, தரமான உணவு வழங்க வேண்டும் என முதலமைச்சர் .எடப்பாடிகே.பழனிசாமி கவனத்திற்கு எடுத்துச் சென்றார். அதன் பேரில், கரோனா நோயாளிகளுக்கு தனியார் உணவகங்கள் வாயிலாக தரமான உணவுகள் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், நாளை (22.07.2020) முதல் கொரோனா பாதுகாப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ,தனியார் உணவகங்கள் வாயிலாக தரமான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory