» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் கரோனா நோயாளிகள் குத்தாட்டம் ! : சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

திங்கள் 20, ஜூலை 2020 12:17:02 PM (IST)



நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அருகே தனியார் பள்ளியில் தங்க வைக்க பட்டு உள்ள கரோனா தொற்று நோயாளிகள் சிலர் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதைத்தொடர்ந்து ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் அங்கு இடம் இல்லாததால் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் நோயாளிகள் தங்க வைக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆசாரிப்பள்ளம் அருகே உள்ள தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகள் சிலர் இரவு நேரத்தில் டம்ளர் மற்றும் பாத்திரங்களை வைத்து தாளமிட்டு குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை அதிகம் பேர் பார்த்து ஷேர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory