» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெண்ணிடம் திருமண ஆசை காட்டி தவறாக நடந்தவர் கைது : பேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்

வெள்ளி 17, ஜூலை 2020 5:56:14 PM (IST)

பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணிடம் திருமண ஆசை காட்டி தவறாக நடந்து ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் பேஸ்புக் மூலம், இறைச்சகுளம் பகுதியை சேர்ந்த லோகேஷ் குமார் என்பவரிடம் அந்த பெண் பழகியுள்ளார்.  லோகேஷ் குமார் பலமுறை அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி தவறாக நடந்துள்ளார். மேலும் தொழில் தொடங்க வேண்டும் என்று கூறி சுமார் ரூ. 4 லட்சம் மற்றும் 30 சவரன் நகை வாங்கியுள்ளார். அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய போது  லோகேஷ் குமார் அந்த பெண்ணை கெட்ட வார்த்தை பேசி,  தாக்கி, அந்தப்பெண்ணை, இணையதளத்தில் தவறாக சித்தரித்து பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்தாராம்.

உடனே அந்த பெண் இது குறித்து, மாவட்ட எஸ்பி., பத்ரி நாராயணனிடம் புகார் அளித்தார். புகாரை விசாரித்த எஸ்பி., உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அந்த பெண்ணை ஏமாற்றி நகையை வாங்கி  மிரட்டிய  லோகேஷ் குமாரை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சாந்தா குமாரி கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory