» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஏடிஎம்மிற்கு கண்ணீர்அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்மநபர்கள் : குமரி மாவட்டத்தில் பரபரப்பு

ஞாயிறு 12, ஜூலை 2020 8:31:55 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 மாதங்களாக மூடிக்கிடந்த ஏடிஎம் மையத்திற்கு மாலை அணிவித்து, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்ம ஆசாமிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் ஏ.டி.எம் மையம் இயங்கி வருகிறது. இந்த ஏ.டி.எம் மையத்தை மேக்காமண்டபம், வேர்கிளம்பி, மாறகோணம், கைசாலவிளை, மணலிக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்ட ஓரிரு வாரங்களிலேயே இந்த ஏ.டி.எம் சேவை மையம் பூட்டப்பட்டது.இதையடுத்து கடந்த மூன்று மாதங்களாகவே ஏடிஎம் மையம் செயல்படாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் மக்கள் பல கிலோ மீட்டர் பயணித்து தக்கலை, அழகிய மண்டபம் ஆகிய பகுதிகளுக்கு சென்று பணம் எடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். பொதுமுடக்கத்தால் பொதுப் போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளதால், ஏடிஎம் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை மேலாளருக்கு மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தாக கூறப்படுகிறது.

இதில் எந்தப் பலனும் இல்லாத நிலையில், செயல்படாமல் பூட்டி கிடந்த  வங்கி ஏடிஎம் சேவை மையத்திற்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், ஏடிஎம் இயந்திரத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். காலையில் இதைக்கண்ட மக்கள் பரவலாக பேச தொடங்கியுள்ளனர். அத்துடன் ஏடிஎம் மையத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory