» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாட்டுச்சாண கரைசலை தலையில் ஊற்றி பிறந்தநாள் கொண்டாட்டம் : வேகமாக பரவும் வீடியோ

சனி 11, ஜூலை 2020 1:06:32 PM (IST)

கன்னியாகுமரியில் முட்டை, தக்காளி மாட்டுச்சாண கரைசலுடன் இளைஞர் ஒருவருக்கு அவரது நண்பர்களுடன் வித்தியாசமான முறையில் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே பரம்பை என்னும் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து, அந்த பகுதியை சேர்ந்த அவர்களின் நண்பரான பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். முதலில் கேக் வெட்டி கொண்டாடியவர்கள், இரவு திடீரென பிறந்தநாள் கொண்டாடியவரை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து, அவரது உடலில் தயிர், முட்டை, தக்காளி, போன்றவற்றை அடித்து பூசியுள்ளனர்.மாட்டு சாணி கரைசலை தலையில் ஊற்றியும் அபிஷேகம் செய்துள்ளனர்.

இதனை வீடியோவாக பதிவு செய்தவர்கள் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வினோத பிறந்த நாள் கொண்டாட்டம் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த இளைஞர்கள் விழிப்புணர்வின்றி ஒன்று கூடி வினோத விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory