» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆடி அமாவாசை தா்பண நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை : குமரி ஆட்சியர் அறிவிப்பு

சனி 11, ஜூலை 2020 11:13:54 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை பலி தா்பண நிகழ்ச்சி நடத்த அனுமதியில்லை என ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வேகமாக பரவி வருகிறது. அத்துடன் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பலி தா்பண நிகழ்ச்சிக்கு நிகழாண்டு அனுமதியில்லை. எனவே மக்கள் பொதுஇடங்களில் கூடுவதை தவிா்க்க வேண்டும்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் 517 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை மொத்தம் 456 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் 3250 பேரும், குமரி மாவட்டத்துக்கு வெளியூரிலிருந்து வந்த பயணிகளில் 4990 பேரும் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory