» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு : 6 பேர் மீது குற்றப்பத்திரிகை

சனி 11, ஜூலை 2020 10:20:15 AM (IST)

சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் வில்சன் (57). இவர், கடந்த ஜனவரி மாதம் அங்குள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்தபோது, மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டார்.இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் சமீம் (30), தவ்பீக் (27), கடலூரைச் சேர்ந்த மொய்தீன் (53), ஜாபர் அலி (26), பெங்களூருவைச் சேர்ந்த மெகபூப் பாஷா (48), இஜாஸ் பாஷா (46) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்பதால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு  மாற்றப்பட்டது.இந்த வழக்கு விசாரணை, சென்னையை அடுத்த பூந்த மல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், 6 பேர் மீதும் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று தாக்கல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory