» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்தூரில் 2 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு

வெள்ளி 10, ஜூலை 2020 8:01:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 2 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தூத்தூர் மீனவ கிராமத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 16 போலீசாருக்கு தூத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில்  44 வயது போலீஸ்காரர், 28 வயது சிறப்பு படை போலீஸ்காரர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசார் பணியாற்றிய நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்து தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory