» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இழந்து போன வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தமிழக அரசுக்கு சுய உதவிக் குழு பெண்கள் கோரிக்கை!

சனி 4, ஜூலை 2020 5:57:15 PM (IST)தூத்துக்குடியில் இழந்து போன வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பல கிராமங்களைச் சேர்ந்த 1000 சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். 

தற்போதைய சமூக விலகல் விதிமுறைகளைக் கடைப்பிடித்து, அவரவர் வீடுகளுக்குள்ளே, தாமாகவே முன்வந்து போராட்டத்தை மேற்கொண்டனர். இதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்திற்கான தங்கள் உரிமைகளை வெளிப்படுத்தினர். தங்களது ஒற்றுமையைக் காட்டும் விதமாக, உறுப்பினர்கள் வீடுகளுக்குள்ளே, இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதை வலியுறுத்தும் பதாதைகள், மற்றும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை ஆதரிக்கும் முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இருந்த புகைப்படங்களை, வாட்ஸப்பில் பகிர்ந்தனர். 

தற்போதைய கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட தாக்கங்களும்,  ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தொடர்ந்து மூடப்பட்டிருக்கிற தாக்கங்கங்களோடு  சேர்ந்து,  பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள், லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுனர்கள், மெக்கானிக்குகள், துறைமுக ஊழியர்கள் என பலர் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 

சுய உதவிக் குழு உறுப்பினர்களில் பலர், சிறிய அளவிலான தொழில்முனைவோராக இருந்தனர். ஆனால், தற்பொழுது அவர்களது தொழில் ஆதாரம் முற்றிலும் துடைத்தெறியப்பட்டு விட்டது. இதுபோன்ற மோசமான காலங்களில் வேலை வாய்ப்புகள் இல்லாதது நமது மாவட்டத்திற்கு இடையூறாக உள்ளது. குறுகிய கால ஆதாயங்களுக்காக சில இயக்கங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான தூண்டுதல் காரணமாக, மக்களின் உணர்வுகள் தவறான திசையில் தூண்டப்பட்டு, ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டது என  நாங்கள் நம்புகிறோம். 

எனவே அரசு உடனடியாக தலையிட்டு இழந்து போன வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்து, மூடப்பட்ட பல அலைகளை திறந்து, அவைகளை சார்ந்து தொழில் செய்து வந்தோரின் வாழ்வாதாரத்தை காத்திட, விரைந்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory