» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொரோனா பரிசோதித்த வியாபாரிகள் வெளியே நடமாடினால் நடவடிக்கை : ஆணையர் எச்சரிக்கை

சனி 4, ஜூலை 2020 1:42:00 PM (IST)

கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இயங்கிவந்த தற்காலிக சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த அனைத்து வியாபாரிகளுக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் தங்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்திய பிறகும் வடசேரி சந்திப்பில்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் கடை அமைத்து வியாபாரம் செய்ததால் ஆணையர் ஆஷா அஜித்  உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் கடைகளை அப்புறப்படுத்தினர். மேலும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory