» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தற்காலிக காய்கறி சந்தையில் ஆணையர் ஆய்வு

சனி 4, ஜூலை 2020 10:48:12 AM (IST)நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறிச் சந்தையில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆய்வு மேற்கொண்டார். 

நாகர்கோவில் மாநகராட்சி அவிட்டம் திருநாள் மகாராஜா மைதானத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக காய்கறிச் சந்தையில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சரலூர் மீன் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள வியாபாரிகளிடம் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வியாபாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.மேலும் அவிட்டம் திருநாள் மகாராஜா மைதானத்தில் அமைந்துள்ள நுண் உர செயலாக்க மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் சத்யராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory