» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொரோனா பாதித்தோர் புகைபடங்களை வெளியிட கூடாது : குமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சனி 4, ஜூலை 2020 10:33:21 AM (IST)

கொரோனா பாதித்த நபர்களின் புகைபடங்களை வெளியிட வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்வடநேரே தெரிவித்துள்ளார்.

ஜுலை 5,12,19,26 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு அறிவிப்பின்படி முழு ஊரடங்கு எந்தவிதமான தளர்வுகளும் இன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமல் படுத்தப்படும். பொதுமக்கள் வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கொரோனா நோய்யினால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டவர்  மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பொழுதும், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் பொழுதும், அவர்களை புகைப்படம் எடுத்து சில நபர்கள் சமூக வலைதளங்களில் பிரசுரம் செய்கின்றனர்.  இத்தகைய சில நபர்களின் செயல்பாடு, கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மனதளவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை உணர்ந்து பாதிக்கப்படும் நபர்களுக்கு மனதளவில் பாதிப்பினை ஏற்படுத்தும் செயல்களில் ஈடு பட வேண்டாம் என  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 207 பேருக்கு அபராதமாக ரூபாய் 20700   வசூலிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், களபணியாளர்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 48490  நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  282  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 279 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 2243 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி  மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 5933 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில்  மொத்தத்தில் இதுவரை  8486  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும்  ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6320 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory