» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

வெள்ளி 3, ஜூலை 2020 5:39:30 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டில்பாட்டை சேர்ந்தவர் கவாஸ்கர் இவர் மீது இரணியல் காவல் நிலையத்தில் கொலைமுயற்சி வழக்கும், சிறுமிகளிடம் தவறாக நடந்தது தொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்கு உள்ளிட்ட  பல வழக்குகள் உள்ளன. இவர்  தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதை தொடர்ந்து இவரை  குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்பி., ஸ்ரீநாத்  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநெரேவுக்கு  பரிந்துரை செய்தார். அதன்படி  கவாஸ்கரை இரணியல் காவல் நிலைய போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory