» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற குமரி மாவட்ட பெண்ணுக்கு கொரோனா

செவ்வாய் 30, ஜூன் 2020 11:34:24 AM (IST)

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற குமரி மாவட்ட பெண்ணுக்கு கொரோனா உறுதியானது.

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளத்தை சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார். இவருக்கு கணவர் ஒரு மகன், மகள் உள்ளனர். இதற்கிடையே  அந்தப் பெண் தனது கணவர் உட்பட 5 பேருடன் காரில் திருநெல்வேலி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்துக்கு சென்றார்.

பின்னர் அங்குள்ள உறவினர் ஒருவரின் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பி வந்து கொண்டிருந்தனர். கார் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியை வந்தடைந்ததும் சளி பரிசோதனை  செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அந்த பெண்ணுக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.தொடர்ந்து வடக்கு தாமரைகுளம் விஏஓ சிவராகுல், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய சுகாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் பிள்ளை ஆகியோர் பெண்ணின் வீட்டிற்கு சென்று நிலைமையை எடுத்துக் கூறியுள்ளனர்.பின்னர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அந்த பெண்ணை சிகிச்சைக்கு அனுப்புவதற்காக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். பல மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. அதனால் அவரது மகனின் பைக்கில் அந்த பெண் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருடைய மகனுக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை எடுத்ததோடு, தனிமைப் படுத்தியும் வைக்கப் பட்டுள்ளார். இந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று  இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். தொடர்ந்து அவரது கணவர், மகளுக்கு ரத்த மாதிரி எடுத்து ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பினர்.இவருக்கு நாகர்கோவில் பகுதியில் தொற்று கிடைத்ததா? அல்லது திருநெல்வேலி மாவட்ட துக்க நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை.

புன்னையடி ஊரில் ஒரே வீட்டில் 5 பேருக்கு  ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு தாமரைகுளம் பகுதியிலும் கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை அந்த பகுதி முழுவதும் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory