» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு வலை

செவ்வாய் 30, ஜூன் 2020 10:30:20 AM (IST)

கன்னியாகுமரி அருகே அம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி அருகே பஞ்சலிங்கபுரத்தில் தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் காலையில் கோவிலை திறந்து பூஜைகள் செய்து விட்டு இரவில் பூட்டிவிட்டு செல்வது வழக்கமாம். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலையில் கோவிலை திறக்க சென்ற போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஒரு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. மற்றொரு உண்டியலையும் காணவில்லை. இதுகுறித்து அவர் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். தலைவர் சுப்பையா, செயலாளர் அய்யப்பன், பொருளாளர் சுப்பிரமணியம் ஆகியோர் கோவிலுக்கு வந்து உண்டியலை தேடினர். அப்போது மாயமான உண்டியல் அருகில் உள்ள தென்னந்தோப்புக்குள் உடைக்கப்பட்டு கிடந்தது.

இதுதொடர்பாக ஊர் தலைவர் சுப்பையா கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மற்றொரு உண்டியலை தூக்கி சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து உடைத்து பணத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது.

கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அம்மன் கோவில் அருகே ராகவேந்திரா கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் நடமாடிய காட்சி பதிவாகி இருந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory