» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சாத்தான்குளம் சம்பவம் குறித்து சமூவலைதளங்களில் அவதூறு : சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

செவ்வாய் 30, ஜூன் 2020 8:59:25 AM (IST)

சாத்தான்குளம் சம்பவம் குறித்து வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த தந்தை - மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அடுத்தடுத்து உயிரிழந்தனா். காவல் துறையின் செயலுக்கு கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது. இது தொடா்பாக சமூக ஊடகங்களிலும் கண்டன கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் 3 போ் சோ்ந்து இளைஞரை அரை நிா்வாண நிலையில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு தாக்கும் வீடியோ காட்சிகள் வேகமாக பரவுகிறது. இந்தக் காட்சிகள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்ததுபோல் சிலா் பகிா்ந்தனா். இதற்கு போலீஸாா் மறுப்பு தெரிவித்துள்ளனா். மேலும், வதந்தி பரப்புபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளையும், வதந்திகளையும் சம்மந்தமில்லாத வீடியோ போன்றவற்றையும் சிலர் பரப்பிவருவதாக புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் சிலர் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதை சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்துடன் இணைத்து பரப்பி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி வீடியோ குறித்து விசாரணை செய்ததில் அந்த வீடியோ 2019 ம் ஆண்டு மகாராஷ்ரா மாநிலம் நாக்பூர் அருகே நடைபெற்ற தனிநபர்கள் சம்மந்தப்பட்ட ஒரு வீடியோ என்பதும், அதன் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததும் தெரியவருகிறது. எனவே மேற்படி வீடியோவை எடுத்து சாத்தான்குளம் சம்பவத்துடன் சம்மந்தப்படுத்தி விஷமிகள் சமூக வலைத்தளங்களில் தவறாக தகவல்களை பரப்பி வருவது விசாரணையில் தெரியவருகிறது. எனவே, மேற்படி பதிவிட்டவர்களை கண்டுபிடித்து தக்க சட்டப்பூர்வான நடவடிக்கைகள் மேற்கொள்ள புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. தனிநபர்கள் மற்றும் சமூக வலைத்தள குழக்களில் தவறான வதந்தியை பரப்புவர்கள் மற்றும் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJun 30, 2020 - 10:00:29 AM | Posted IP 162.1*****

உண்மையை மறைச்சு மறைச்சு ஒவ்வொரு நேரமும் புது விளக்கத்தை கொடுக்குறதே உங்கள் காவல்துறை தான். உண்மையை நீங்களே சொல்லிட்டா ஏன் வதந்தி வருது யுவர் ஆனர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory