» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கரோனா பரவலை தடுக்க முழு ஒத்துழைப்பு தேவை : பொதுமக்களுக்கு தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

திங்கள் 29, ஜூன் 2020 7:03:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க கடைகள்,நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, கரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடுத்திடும் விதமாக சமூக தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்தும் வகையில், கடந்த 24.03.2020 முதல் 30.06.2020 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் போதும், பொது இடத்தில் நடமாடும் போதும் உரிய முறையில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக வீட்டை விட்டு வெளியில் வரும் போதும், பொது இடங்களில் நடமாடும் போதும் உரிய முறையில் முககவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களுக்கு முதன்முறையாக இருப்பின் காவல் துறையினர், மற்றும் உள்ளாட்சித்துறையினர் மூலம் ரூ.5 உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும் மீண்டும் அவ்வாறான நிலையில் பிடிபடின் ரூ.500 உடனடி அபராதம் விதிக்கப்படும் எனவும் மூன்றாவது முறையாக இருப்பின் காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்வதுடன் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கும் ரூ.200 உடனடி அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளின் மேலும் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளி கடைகள், நகைகடைகள், மளிகை கடைகள், காய்கனி விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வணிக நிறுவனங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் முககவசம் அணிந்திருப்பதுடன் தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல், கை கழுவுதல் போன்ற அனைத்து விதமான சுகாதார நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும் வருகை தரும் பொதுமக்களையும் மேற்காண் வழிமுறைகளை தவறாது பின்பற்ற செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், இவ்வாறான உரிய பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைகள்,நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் எனவும், மேற்கண்ட வழிமுறைகளை மீறுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட மாநகராட்சி, உள்ளாட்சித் துறையின் மூலம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வழிமுறைகளை நிறுவனங்கள் பின்பற்றுவதை உறுதி செய்யும் பொருட்டும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைகள்,நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல், கடையினை மூடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வருவாய்துறையினர், உள்ளாட்சித்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோரை கொண்ட பறக்கும் படை குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் இத்தருணத்தில் இந்நோய் பரவலின் தீவிரத்தை உணர்ந்து அத்தியவாசிய காரணங்களின்றி வெளியிடங்களில் வருவதை பொதுமக்கள் தவிர்ப்பதுடன், சமூக இடைவெளியை கடைபிடித்தும், அடிக்கடி கைகளை கழுவுதல் போன்றவற்றின் மூலமும், முககவசம் அணிவதன் மூலமும், கரோனா நோய் தொற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பரவாமல் இருக்க பொதுமக்கள், கடைகள்,நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். 


மக்கள் கருத்து

rajajiJul 1, 2020 - 11:14:01 AM | Posted IP 108.1*****

புதிய பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள காய்கறி மார்க்கெட் காலையில் தினம் தோறும் வரும் கூட்டத்தை மட்டும் பாருங்கள்,பிறகு அம்மா காய்கறி மார்க்கெட்...

தமிழ்ச்செல்வன்Jun 29, 2020 - 07:37:34 PM | Posted IP 173.2*****

வழிமுறைகளை நிறுவனங்கள் பின்பற்றுவதை உறுதி செய்யும் பொருட்டும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைகள்,நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல், கடையினை மூடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வருவாய்துறையினர், உள்ளாட்சித்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோரை கொண்ட பறக்கும் படை குழு அமைக்கப்பட்டுள்ளது. சுருக்கமா என்னன்னா, மூணு டிபார்ட்மென்ட்க்கும் இனி லஞ்சம் கொடுக்கணும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory