» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் 24 இடங்கள் தனிமைப்படுத்திய பகுதிகளாக மாற்றம்

திங்கள் 29, ஜூன் 2020 5:29:00 PM (IST)

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் குமரி மாவட்டத்தில் 24 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் மட்டுமே முதலில் பாதிக்கப்பட்டு வந்தனர்.இந்த நிலையில் தற்போது கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலும் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தூத்தூர், சின்னத்துறை, சின்னமுட்டம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதே போல அருமநல்லூர், சீதப்பால், தேவிக்கோடு, வள்ளவிளை, குலசேகரம், சுசீந்திரம் ஆஸ்ராமம், பாகோடு என மாவட்டம் முழுவதும் பரவல் அதிகரித்து உள்ளது.

நாகர்கோவிலில் மறவன்குடியிருப்பு, ஆயுதப்படை சாலை, வல்லன்குமாரன்விளை, வடசேரி ஒழுகினசேரி, மரச்சீனிவிளை, பறக்கை கண்ணன்குளம் ஆகிய இடங்களில் கொரோனா தொற்று காணப்படுகிறது. அந்த வகையில் மொத்தம் 24 பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம் உள்ளது. அவ்வாறு நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன.மேலும் அவை சிவப்பு மண்டல பகுதியாக மாற்றப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடக்கிறது. அதோடு தினம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory