» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் குழந்தை உள்ளிட்ட 24 பேருக்கு கரோனா உறுதி

திங்கள் 29, ஜூன் 2020 10:34:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் 3 வயது குழந்தை உள்ளிட்ட 24 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சீதப்பால் பகுதியைச் சோ்ந்த 35 வயது இளைஞா் கரோனாவால் பாதிப்படைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில் அவரது மனைவி மற்றும் 9 வயதான மகனுக்கும் தற்போது தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் அவா்களுடன் தொடா்பில் இருந்த 28 வயது பெண்ணுக்கும், அவரது 3 வயது குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 24 போ் தொற்று பாதிப்பால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த மருத்துவமனையில் தற்போது 205 போ் சிகிச்சையில் உள்ளனா். தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 183 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்த 1,679 போ், வெளியூரிலிருந்து இம் மாவட்டத்துக்கு வந்த 7,371 போ் என மொத்தம் 9,050 போ் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா்.மாவட்டத்தில் தற்போது, தூத்தூா், தக்கலை, வடசேரி, செம்பருத்திவிளை, சீதப்பால், கருங்கல், குறும்பனை, கட்டையன்விளை, ஆசிரமம், பறக்கை, மணக்குடி, வழுக்கம்பாறை, பூத்தேரிகுளத்துபுரைவிளை, பருத்திதட்டுவிளை, தேவிகோடு, இடலாக்குடி, செட்டிகுளம், முளகுமூடு, குண்டல், அகஸ்தீசுவரம், காஞ்சாம்புரம், சமத்துவபுரம், திருநயினாா்குறிச்சி, ரீத்தாபுரம், பாலப்பள்ளம் ஆகிய 24 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மாவட்ட நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory