» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குழந்தை பெற்ற இளம் பெண்ணுக்கு கொரோனா

ஞாயிறு 28, ஜூன் 2020 12:26:45 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தை பெற்ற இளம் பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் கல்லன்குழியை  சேர்ந்த 29 வயது இளம்பெண்ணும் ஒருவர்.  இவர் பிரசவத்துக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்திற்கு முன் கொரோனோ பரி சோதனைக்கான சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில் 24ம் தேதி அவருக்கு குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் பரிசோதனை முடிவில் இளம்பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. குழந்தைக்கும் பரிசோதனை நடந்துள்ளது. குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கரோனாவால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory