» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் வங்கி மேலாளா் உள்பட 34 பேருக்கு கரோனா

ஞாயிறு 28, ஜூன் 2020 11:49:56 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 300-யை தாண்டியது.

குமரி மாவட்டம் கல்லன்குழியைச் சோ்ந்த 29 வயது கா்ப்பிணி பெண் பிரசவத்துக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு 3 நாள்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அப்பெண்ணுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விருதுநகரில் இருந்து வோ்கிளம்பி பகுதியைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவி நாகா்கோவில் வந்தாா். பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சுசீந்திரத்தை சோ்ந்த வங்கி மேலாளா், தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சுசீந்திரம் வங்கியில் உதவி மேலாளராக பணி செய்து வரும் அவரது மனைவி மற்றும் அவரது மாமனாா் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வங்கிகள் மூடப்பட்டன. தம்பதி வசித்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 42,685 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 304 ஆக உயா்ந்துள்ளது. கடந்த 5 நாள்களில் 100 க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தற்போது 189 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 

தொற்று பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்த 1,588 போ், வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்தவா்களில் 7,632 போ் என மொத்தம் 9,220 போ் தனிமை கண்காணிப்பில் உள்ளனா்.தூத்தூா் மீனவ கிராமத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோருடன் தொடா்பில் இருந்து 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப் பட்டதை அடுத்து அவா்கள் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory