» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தந்தை மகன் உயிரிழப்புக்கு அதிமுக அரசே பாெறுப்பு : உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஞாயிறு 28, ஜூன் 2020 9:21:08 AM (IST)சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழப்புக்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என   உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் வீட்டுக்கு திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் நேற்று  சென்று ஆறுதல் கூறினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வியாபாரிகள் உயிரிழப்புக்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். வியாபாரிகளின் இறப்பு குறித்து முறையான விசாரணை நடத்தவில்லை என்றால் சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு தொடரும் என்றாா். 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ஞானதிரவியம், திருச்சி அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ, சண்முகையா எம்எல்ஏ, மாநில திமுக இளைஞரணி துணைச் செயலா் ஜோயல், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா் உள்பட திரளான நிா்வாகிகள் உடனிருந்தனா்.


மக்கள் கருத்து

kumarJun 28, 2020 - 01:17:40 PM | Posted IP 162.1*****

chennayil irunthu vanthal 15 natkal thanimai paduthapaduvargal endru sonnargale....pamaranukumattumthan intha vithiya?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory